Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கமல் நிறுவனத்தின் காசாளர் மரணம்”…. உருக்கத்துடன் டிவிட் செய்த கமல்…!!!!

கமல் தன் நிறுவனத்தின் காசாளரான முரளி உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் நடிப்பது மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மைகளை தனக்குள் கொண்டிருக்கின்றார். இவர் 1981 ஆம் வருடம் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். இந்நிறுவனத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு திரைப்படங்களை தயாரித்து பல படங்களை விநியோகமும் செய்தார்.

இந்நிலையில் இந்த நிறுவனத்தில் 32 வருடங்களாக காசாளராக பணியாற்றிய முரளி என்பவர் உயிரிழந்துள்ளார். இதை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கத்துடன் கூறியுள்ளதாவது, “எங்கள் RKFI திருமணத்தில் காசாளராக 32 வருடங்கள் பணியாற்றிய எஸ்.முரளி-யை இன்று நாங்கள் இழந்து விட்டோம். இது அவரது குடும்பத்திற்கும் எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. மிஸ் யூ முரளி… நீங்கள் இவ்வளவு சீக்கிரம் விடை பெற்றிருக்க வேண்டியதில்லை…” என பதிவிட்டுயிருக்கின்றார்.

Categories

Tech |