பழம்பெரும் தெலுங்கு நடிகரான கைகலா சத்யநாராயணாவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவருக்கு வயது 86. இவர் தெலுங்கில் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குணச்சித்திரம், வில்லன் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் ஏற்று நடித்துள்ளார். தமிழில் கமலஹாசன் நடிப்பில் வெளியான பஞ்சதந்திரம் படத்தில் ஸ்ரீமன் மாமனாராக நடித்துள்ளார்.
இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் தமிழில் பஞ்சதந்திரம், பெரியார் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.