நடிகர் கமல் தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட இரு தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மையம் கட்சியினுடைய நான்காம் வருட தொடக்கவிழாவானது வரும் 21ஆம் தேதி அன்று ஆழ்வார்பேட்டையில் இருக்கும் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் கூட்டணி கட்சிகள் தொடர்பில் முடிவு செய்யப்படும் என்றும் தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்களின் விருப்ப மனுக்களும் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆன்லைனிலும் மனு பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கமல் கட்சிக்கு தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஓட்டு வங்கிகள் அதிகம் இருந்தது. எனவே தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தியாகராயநகரில் அல்லது மயிலாப்பூரில் அல்லது இரண்டிலும் கமல் போட்டியிட விரும்புவதாக அவரின் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.