விஜய் மற்றும் கமல் நடனமாடிய பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் உலக நாயகன் கமல்ஹாசன். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்தது.
இந்நிலையில் படம் சென்ற ஜூன் 3-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் படமாக இருக்கின்றது. கதாபாத்திரங்கள் தேர்வு, ஸ்கிரீன்பிளே, ஆக்சன் காட்சிகள் என அனைத்திலும் லோகேஷ் கனகராஜ் ஆதிக்கம் இருக்கின்றது. இத்திரைப்படம் சர்வதேச தரத்தில் இருப்பதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றது. லோகேஷ் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் செதுக்கியிருப்பதாக அவருக்கு பாசிட்டிவான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றது.
Throw Back #Thalapathy @ActorVijay With #Ulaganayagan Kamal Haasan 😍 #Varisu pic.twitter.com/tksVoCw9BN
— Actor Vijay Universe (@ActorVijayUniv) June 25, 2022
விக்ரம் திரைப்படம் வெற்றி பெற்றதால் கமல், லோகேஷ் கனகராஜுக்கு காரும் சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தையும் படத்தில் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்தவர்களுக்கு பைக்குகளையும் கமல்ஹாசன் பரிசாக வழங்கினார். இந்தநிலையில் கமல் மற்றும் விஜய் ஒரு பார்ட்டியில் நடனமாடிய பழைய வீடியோவானது தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. பத்து வருடங்களுக்கு முன்பாக சகலகலா வல்லவன் திரைப்படத்தில் இடம்பெற்ற இளமை இதோ பாடலுக்கு கமல் நடனம் ஆடுகின்றனர். அப்போது கமல் விஜயை நடனம் ஆட அழைக்கின்றார். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.