தமிழகத்தில் இரு ஆளுமைகளாக விளங்கிய முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா – கருணாநிதி மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கின்றது என்று கூறி திரைப்பிரபலங்கள் அரசியலை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கிய கமலஹாசன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். மேலும் தற்போது சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார்.
விரைவில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் இந்நிலையில், நடிகர் கமலஹாசன் – ரஜினியைத் தொடர்ந்து விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் தற்போது அரசியலுக்கு வரும் நடிகர்கள் ( ரஜினி, கமல்) சிறப்பான ஆட்சியை வழங்குவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த அவர் நடிகர்கள் என்பதால் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார்.