திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சியில் சொத்துவரி உயர்வுக்கான அவசர கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது. மன்ற கூட்ட அரங்கில் சுய நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் சொத்து வரி உயர்வு தொடர்பான தமிழக அரசின் புதிய கண்டனம் குறித்து விவாதிப்பதாக கூறப்பட்டது. ஆனால் 18 கவுன்சிலர்கள் உள்ள நகராட்சியில் 13 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
சொத்து வரி உயர்வை விவாதிப்பதற்கு முன் தூய்மை பணியாளர் பற்றாக்குறை, பணியாளர் வருகைக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு, குப்பை தேங்கிக் கிடப்பது, குடிநீர் வராமல் இருப்பது போன்ற அடுக்கடுக்கான புகார்களை பெண் கவுன்சிலர்கள் அடுக்கிக்கொண்டே சென்றுள்ளனர். மேலும் காங்கேயம் நகராட்சியில் திமுக துணை தலைவரை மேடையில் அமர வைக்காமல் உறுப்பினர்களுக்கு இடையே அமர வைக்கப் பட்டது குறித்தும் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனால் செய்வதறியாமல் திகைத்த நகராட்சி தலைவர் சூரிய பிரகாஷ் மற்றும் நகராட்சி ஆணையர் வெங்கடேஸ்வரன் மன்ற பொருள் தொடர்பான கோரிக்கையை மட்டும் தான் விவாதிக்கலாம். மற்ற பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க முடியாது என தெரிவித்து பாதியில் கூட்டத்தை விட்டு வெளியேறியுள்ளனர். நகராட்சி ஆணையர் இந்த செயலை கண்டித்து திமுககாங்கிரஸ் உள்ளிட்ட பெண் கவுன்சிலர்கள் நகராட்சி தலைவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவரும் கூட்டத்திலிருந்து பாதியில் வெளியேறியதால் சுமார் அரைமணிநேரம் கூட்ட அரங்கில் இருந்தவர்கள் காத்திருந்தனர். இதனால் நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
மேலும் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் 4 பேர் முன்னதாகவே வெளிநடப்பு செய்துள்ளனர். அடிப்படை பிரச்சினைகள் குறித்து விவாதிக்க கூட தயாராக இல்லாத தலைவரும் ஆணையரும் எப்படி வரி உயர்வை மக்கள் ஏற்பார்கள் என திமுக கவுன்சிலர்கள் கிளம்பியதால் காங்கேயம் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.