Categories
மாநில செய்திகள்

கமிஷன்…! கலெக்ஷன்…! கரெக்ஷன்….! முடியலப்பா சாமி…..! டெல்லி போய் கம்பளைண்ட் பண்ண இபிஎஸ்….!!!!

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிகாலை சந்தித்து பேசினார். இவர் டெல்லி செல்லும் போது ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் அதைப் பற்றி அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதை தொடர்ந்து அவரை சந்தித்து விட்டு மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

திமுக அரசு, மெத்தனமாக இருக்கின்ற காரணத்தினால்…  அலட்சியமாக இருக்கின்ற காரணத்தினாலே தமிழ்நாடு முழுவதும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதையெல்லாம் ஏற்கனவே இப்பொழுது இருக்கின்ற திமுக அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வந்தோம். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்க தவறி விட்டார்கள். அதனால் மத்திய உள்துறை அமைச்சரிடத்தில் தெரிவிக்கப்பட்டது. அதோடு தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி , பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதையும் நாங்கள் சுட்டிக் காட்டி இருக்கின்றோம்.

அதோடு தமிழகத்தில் எல்லா துறைகளிலும் கமிஷன், கலெக்சன், கரெப்க்ஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எந்த ஒரு துறையிலும் நியாயமான பணி நடைபெறவில்லை. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும் தெரிவித்து இருக்கின்றோம். அரசியல் சம்பந்தமாக எதுவும் சந்திக்கவில்லை, அரசியல் சம்மந்தமாக எதுவும் பேசவில்லை” என்று தெரிவித்தார்.

Categories

Tech |