Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மின் கம்பத்தில் தொங்கிய எலக்ட்ரீசியன்…. சடலத்தை வைத்து போராடிய உறவினர்கள்…. அரியலூரில் பரபரப்பு…!!

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழமாளிகை கிராமத்தில் எலக்ட்ரீசியனான ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொன்பரப்பி ஊராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தெரு மின் விளக்குகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ரமேஷ் மீது மின்சாரம் பாய்ந்துவிட்டது. இதனால் மின்கம்பத்தில் தொங்கிய படியே ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து உறவினர்கள் ரமேஷின் சடலத்தை பொன்பரப்பி சாலையில் வைத்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பிறகே பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |