Categories
தேனி மாவட்ட செய்திகள்

“கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல் விதைகள் இருப்புயிருக்கிறது”…. அதிகாரி தகவல்….!!!!!!

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 2-ம் போக நெல் சாகுபடிக்கான நெல் விதைகள் இருப்பு இருப்பதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக சாகுபடி பணிகள் சென்ற ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கியது. தற்பொழுது வயல்களில் இருக்கும் நெற்பயிர்கள் ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு தயாராகும் நிலையில் இருக்கின்றது இந்த நிலையில் இரண்டாம் போக சாகுபடிக்கான நெல் விதைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக கம்பம் வேளாண்மை துறை உதவி இயக்குனர் பூங்கோதை கூறியுள்ளார்.

இது பற்றி அவர் கூறியுள்ளதாவது, கம்பம் வட்டாரத்தில் சம்பா, நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக கோ 51, என்எல்ஆர்-34449 ரக நெல் விதைகள் கூடலூர் துணை வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் காமயகவுண்டம்பட்டி துணை வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் இருப்பு வைக்கப்பட்டிருக்கின்றது. கோ 51 ரக நெல்  105 நாள் முதல் 110 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகும். இந்த நெல் ரகங்களுக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகின்றது. ஆகையால் 2-ம் போக நெல் சாகுபடிக்கு கம்பம் வட்டார விவசாயிகள் வேளாண்மைத்துறையினால் வழங்கப்படும் கோ-51, என்.எல்.ஆர் 34449 ரக நெல் விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், உயிர் உரம், நுண்ணூட்ட உரம் உள்ளிட்டவற்றை வேளாண்மை துறை அலுவலகத்தில் வாங்கி பயனடையலாம் என கூறியுள்ளார்.

Categories

Tech |