சென்னை உள்ள வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி பண்டிகை கொலு வைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. கொலுவில் அமர்ந்துள்ள அம்பாளுக்கு தினசரி சிறப்பு அலங்காரங்களும் பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஏழாம் நாளான நேற்று அம்மனுக்கு கம்பாத்தி அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் ஏழாம் நாளான நேற்று விழாவை சிறப்பிக்க ரங்கவள்ளி ஆர்ட்ஸ் ஃபவுண்டேஷனை சேர்ந்தவர்கள் குத்து விளக்கை ஏற்றி தொடங்கி வைத்தனர்.
முன்னதாக காலையிலும் மாலையிலும் சிறப்பு பூஜைகளும் அலங்காரங்களும் தீபாராதனைகளும் நடைபெற்றது. மேலும் மாலையில் ஸ்ரீ ருத்ரம், வேதபாராயணம், ஸ்ரீ சுக்தம் ஆகியவை நடைபெற்றது. மேலும் குழந்தைகளுடன் வந்த பெற்றோருக்கு 10 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்பட்டு சரியான விடை அளித்தவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏழாம் நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.