Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கம்பிக்கு இடையில் சிக்கிய பசுமாடு … 1மணிநேர போராட்டம் … பத்திரமாக மீட்ட போலீசார்…!!

 கம்பிகளுக்கு இடையே சிக்கிக் கொண்ட பசுமாட்டை தீயணைப்புப் படையினருடன் இணைந்து போலீசார் பத்திரமாக மீட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் , சுற்றுலா மாளிகை நுழைவு வாயிலில் உள்ள கால்வாய்க்கு மேல் நடப்பதற்காக இரும்பு கம்பிகளால் பாலம் போடப்பட்டுள்ளது. அதில் கால்கள் சிக்கிக் கொண்டதால் பசுமாடு ஒன்று வெளியில் வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த வழியே  வாகனத்தில் சென்ற வடக்கு மண்டல ஐஜி நாகராஜ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அதைக்  கண்டு உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு பசுமாடு பத்திரமாக மீட்கப்பட்டது.

Categories

Tech |