நான் என்னுடைய சொத்து விபரங்களை விரைவில் வெளியிடுவேன். அதேபோன்று தி.மு.க தலைவர்கள் தங்களது சொத்து விபரங்களை வெளியிட தயாரா? என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார். தற்போது இதற்கு பதிலளித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கூறியிருப்பதாவது “சம்பள கணக்கை வெளியிடுகிறேன்.
மேலும் சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளை எல்லாம் சொல்ல வேண்டாம். 5 லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா (அல்லது) இனிமேல் தான் தயார் செய்ய வேண்டுமா என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பி இருக்கிறார்.