கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜவளகிரி வனச்சரக பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானை ஒசட்டி கிராமத்திற்குள் நுழைந்து நெற்பயிர்களை நாசப்படுத்தியது. இதனை அறிந்த கிராம மக்கள் டார்ச் லைட் அடித்தும், சத்தம் போட்டும், தீப்பந்தம் கொளுத்தியும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
சுமார் 1 மணி நேரமாக யானை பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒற்றை காட்டு யானை சுற்றி திரிவதால் கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.