கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக குவிந்துள்ளனர்.
தக்கலை அருகே பத்மநாபபுரம் அரண்மனை சுமார் 3 1/2 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. இந்த அரண்மனையில் ஒவ்வொரு அறையும் விலை உயர்ந்த மரங்களால் கலைநயத்தோடு கட்டப்பட்டுள்ளது. அவ்வாறு கட்டப்பட்ட அறைகள் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.
பத்பநாபபுரம் அரண்மனையின் தரைப்பகுதி சுட்ட சுண்ணாம்பு சிரட்டை கரி, கடுக்காய் ,முட்டை போன்றவற்றால் அமைக்கப்பட்டுள்ளதால் பளிங்கு கல்போன்று காட்சியளிக்கிறது . அந்த அரண்மனையின் அழகையும் கம்பீரத்தையும் காண உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றார்கள்.
பொதுவாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வரத்து சற்று அதிகமாக இருக்கும் அதைப்போல் விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக அரண்மனையை சுற்றி பார்த்து மகிழ்ந்துள்ளனர்.பத்பநாப அரண்மனை கேரள அரசின் தொல் பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.