உலகில் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஐபோன் முன்னணியில் இருக்கிறது. ஐபோன் வாங்க வேண்டும் என்பது பெரும்பாலானோருக்கு கனவாக உள்ளது. நீங்கள் புதிதாக ஒரு ஐபோன் வாங்கும் போது அதில் ஆட்டோமேட்டிக்காகவே கோளாறு ஏற்பட்டால் கேரண்டி என்ற பெயரில் ஒரு புது ஐபோனை பெற முடியும்.
அதேபோல் கோளாறு ஏற்பட்ட ஐபோன் டெய்ஸி (Daisy) என்ற இயந்திரத்தில் வைத்து அதிலுள்ள நல்ல பாகங்கள் தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது. தனியாக பிரித்தெடுக்கப்பட்ட பாகங்கள் மூலம் டெய்ஸி இயந்திரம் புது ஐபோனையும் தயாரிக்கிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் புதிய ஐபோன்கள் குறைந்த விலையில் தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது.