Categories
விவசாயம்

கம்பெனி வேலையை உதறிய இளைஞர்…. இயற்கை விவசாயத்தில் அசத்தி லாபம்…. ஒரு சுவாரசியமான தொகுப்பு…..!!!!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி அருகில் துவரையை இயற்கை முறையில் பயிரிட்டு அதிகமான லாபம் ஈட்டி பட்டதாரி இளைஞர் ஒருவர் அசத்தி வருகிறார்.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி அடுத்துள்ள மேல்பாப்பம்பாடி கிராமத்தில் அருண்பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பி.இ மெக்கானிக்கல் பட்டதாரி ஆவார். இவர் தனது பட்டப்படிப்பை முடித்ததும் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். இதையடுத்து அந்த வேலையை உதறிதள்ளிவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிய அருண்பாண்டியன் விவசாயம் செய்யத் தொடங்கினார். அதன்படி தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் வேர் கடலையை சாகுபடி செய்தார். மேலும் அதில் ஊடுபயிராக பாரம்பரிய நாட்டு துவரையை அருண்பாண்டியன் பயிரிட்டுள்ளார்.

மீதமுள்ள 3 ஏக்கர் நிலத்தில் கேழ்வரகு, உளுந்து ஆகியவற்றை பயிரிட்டுள்ளார். ரசாயன உரங்கள், ரசாயன பூச்சி கொல்லி மருந்துகளை தவிர்த்துவிட்டு முழுவதும் இயற்கை முறையில் பாதுகாப்புடன் பராமரிக்கப்பட்ட பயிர்கள் அறுவடைக்கு தயாராகியது. அதனை தொடர்ந்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அறிவுரையின் படி இயற்கை விவசாயத்தில் சாதித்து சுற்றுவட்டார விவசாயிகளின் கவனத்தை அருண்பாண்டியன் ஈர்த்துள்ளார். இவ்வாறு பயிரிடுவதற்கு முன்பாகவே விளைநிலத்தை நேர்த்தியாக உழுது, அதில் இழை தழைகள் மற்றும் மாட்டுச்சாணம் ஆகியவற்றை சோ்த்து உரிய பக்குவத்திற்கு உருமாற்றியுள்ளார்.

எனவே இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை மட்டுமே அருண்பாண்டியன் மூலதனமாக பயன்படுத்தி வருகிறார். வேர்கடலை மற்றும் துவரை ஒரே சமயத்தில் ஊடு பயிர் செய்யப்படுவதால் நல்ல மகசூல் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இயற்கை விவசாயத்தில் முதலில் பல்வேறு சறுக்கல்களை கண்ட அருண்பாண்டியன், அதிலுள்ள நெளிவு சுழிவுகளை அறிந்து தற்போது நிமிர்ந்து நிற்கிறார்.

தான் செய்த தவறுகளை பிறர் செய்துவிடக் கூடாது என்பதற்காகவே இயற்கை விவசாயம் குறித்த சந்தேகங்களுக்கு சுற்றுவட்டார விவசாயிகளுக்கு அருண்பாண்டியன் அறிவுரைகளை கூறி வருகிறார். தன்னை தொடர்பு கொண்டு யார் வேண்டுமானாலும் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு சில விவசாயிகளை போன்று அதிக மகசூலுக்கு ஆசைப்பட்டு ரசாயன உரங்களை பயன்படுத்தாமல், இயற்கை உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தி லாபம் ஈட்டிவரும் இளம் இயற்கை விவசாயி உண்மையிலேயே பாராட்டுக்குரியவர் ஆவார்.

Categories

Tech |