Categories
தேசிய செய்திகள்

கம்மியான விலையில் சொத்து வாங்க…. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மெகா அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு பல கோடி வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மெகா ஏலத்தில் சொத்துக்களை விற்பனை செய்ய உள்ளது. இதில் மார்க்கெட் விலையை காட்டிலும் குறைந்த விலையில் சொத்துக்களை வாங்க முடியும். எனவே வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துக்களை வாங்க விரும்புவோருக்கு குறைந்த விலையில் வாங்குவதற்கு இது ஒரு அரிய வாய்ப்பு. வீடுகள், பிளாட்டுகள், நிலம், சொத்துக்கள், வேளாண் சொத்துக்கள் என பல்வேறு சொத்துக்களுக்கு ஏலம் விடப்படுகின்றன.

இந்த சொத்துக்களின் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இணையதளத்தில் உள்ள properties என்ற பிரிவைக் கிளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம். சொத்துக்களை வாங்க வருபவர்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இணையதளத்தில் கணக்கை திறந்து கொண்டு செல்போன் நம்பர், இமெயில் ஐடி ஆகியவற்றை verification செய்த பின்னர் ஏலத்துக்கு தயாராகி கொள்ளலாம்.

Categories

Tech |