மருந்துகளின் விலையை அறிந்துக்கொண்டு விலை குறைவான இடத்தில் வாங்குவதற்கு எளிதாக “Pharma SahiDaam” எனும் ஆப்ஐ மத்திய அரசானது அறிமுகம் செய்து இருக்கிறது. நோயை முற்றிலுமாக குணப்படுத்த முடியாத அதே சூழ்நிலையில், முடிந்த வரை அதனைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள நாம் தொடர்ச்சியாக மருத்துவச் சிகிச்சையை எடுத்துக் கொள்கிறோம். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு வேளையும் சாப்பாடு என்பதைப் போலவே சாப்பாட்டிற்கு முன்பு (அல்லது) பின்பு மாத்திரை உட்கொள்ள வேண்டிய கட்டாய சூழல் நம் வாழ்க்கையில் உள்ளது.
ஒரு பக்கம் மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்வது தவிர்க்க முடியாததாக மாறி விட்டாலும், மற்றொருபக்கம் அதன் செலவினங்களும் நம்மை வாட்டி வதைக்கத் தொடங்கியிருகிறது. இதற்குத் தீர்வுகாணும் வகையில் “Pharma SahiDaam” என்றொரு ஆப்-ஐ மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஃபார்மா ஆப்-ஐ நீங்கள் உங்களது ஆண்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் டிவைஸ்களில் டவுன் லோடு செய்து கொள்ளலாம். பிராண்டட் மருந்துகளுக்கு ஈடாக அதேபண்புகளை உடைய, விலை குறைவான மாற்று மருந்துகளை இது உங்களுக்குக் காண்பிக்கும். ஏதேனும் நோய்க்காக மருத்துவரை அணுகி நீங்கள் ஆலோசனை செய்யும்பட்சத்தில், அவர் சில பிராண்டட் மருந்துகளை உங்களுக்குப் பரிந்துரை செய்யக்கூடும்.
அவை விலை அதிகமானவையாக இருக்கலாம். அதுபோன்ற நேரங்களில் தாங்கள் அந்த appல் அந்த மருந்துகளின் பெயர்களைத் தட்டினால், அதே பண்புகளையுடைய குறைந்தவிலையில் மாற்றுமருந்துகள் பட்டியலிட்டுக் காட்டப்படும். மருந்துகளிலுள்ள மூலப் பொருள் என்ன என்பதில்தான் அதன் பண்புகள் இருக்கிறதே தவிர, அதன் பிராண்டட் பெயர்களில் ஒன்றுமே கிடையாது. உதாரணமாக, இந்தியாவில் மிக அதிகமாக விற்பனையாகும் ஆகுமெண்டின் என்ற ஆண்டிபயாடிக் மாத்திரைகளை எடுத்துக்கொள்வோம். இதன் 10 மாத்திரைகள் விலையானது ரூ.200 ஆகும். ஆனால் இதனை நீங்கள் அந்தஆப் பரிந்துரைக்கு மருந்துகளை வாங்கும்போது 6 மாத்திரைகள் ரூ.50 மட்டுமே. இதேபோன்று ஆசிடிட்டிக்கு பயன்படுத்தப்படும் PAN D மாத்திரை (15 மாத்திரைகள்) விலை ரூபாய்.199 ஆகும். அதுவே மாற்று நிறுவனத்தில் 10 மாத்திரைகளை ரூபாய்.22க்கு வாங்கமுடியும்.