Categories
தேசிய செய்திகள்

கம்மி ரேட்ல விமான டிக்கெட் பெறணுமா?…. அப்போ இந்த நாட்களில் புக் பண்ணுங்க…. வெளியான முக்கிய தகவல்….!!!!

கொரோனா தொற்று காலகட்டத்தில் தரைவழி மற்றும் வான்வழி போக்குவரத்து என பல போக்குவரத்து அம்சங்களும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை அடுத்து போக்குவரத்து சேவைகள் துவங்கிவிட்டது. விமானபயணங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை போன்றே அதற்கான டிக்கெட்டுகளுக்கும் அதிக விலை கொடுத்து தான் நாம் பயணிக்க வேண்டும். அதே நேரம் சில ஹேக்குகளை நீங்கள் பயன்படுத்துவதன் வாயிலாக அடுத்த விமானபயணத்தில் சிறிது பணத்தை மிச்சப்படுத்தலாம்.

எப்போதுமே கடைசிநேரத்தில் விமான போக்குவரத்துக்கு டிக்கெட் பதிவுசெய்வது விலை அதிகமாக தான் இருக்கும். இதனால் கூடுமானவரை நீங்கள் முன் கூட்டியே டிக்கெட் பதிவு செய்வது உங்கள் பணத்தை கொஞ்சம் மிச்சப்படுத்த உதவும். அமெரிக்க நாட்டில் இந்த வருடம் ஏப்ரல்-ஆகஸ்ட் வரை குறைவான விலையில் விமான டிக்கெட்டுகளுக்கான தேடல்கள்தான் 240 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் விமான பயணம் பற்றிய கேள்வியில், விமான டிக்கெட் முன்பதிவு செய்ய சிறந்த நேரம் எப்போது..?, மலிவான விமானங்களை கண்டுபிடிப்பது எப்படி?.., என்பது தான்.

கூகுள் பிளைட்ஸ் ஆகஸ்ட் 2017 -ஆகஸ்ட் 2022 வரையிலான டேட்டாக்களை ஆய்வு மேற்கொண்டு விமான டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான சிறந்தநேரம் மற்றும் விமானக் கட்டணச் சலுகைகள் பற்றி கண்டறிந்துள்ளது. கூகுள் பிளைட்ஸ் கூற்றுப்படி, வாரஇறுதி நாட்களைவிட வார நாட்களில் விமான பயணம் மேற்கொள்வது பணத்தை மிச்சபடுத்தும் என கூறுகிறது. அதன்படி குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் பயணிப்பதை காட்டிலும்,  வாரத்தின் நடுப்பகுதியில் பயணிக்கலாம். வார இறுதி தினங்களில் போகும் விமானங்களைவிட திங்கள், செவ்வாய் அல்லது புதன்கிழமைகளில் புறப்படும் விமானங்கள் 12 % மலிவானவை என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி வெளிநாடுகளுக்கு போகாமல் இருந்தால் 20 % சேமித்துகொள்ளலாம். விமானத்தில் குறைவான விலையில் பயணிக்க விரும்புவோர் எவ்வளவு சீக்கிரம் முன் பதிவு செய்கிறோம் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். அமெரிக்க உள் நாட்டு விமானங்கள் புறப்படுவதற்கு 21-60 நாட்களுக்குள் டிக்கெட்டின் விலைகள் மிகக்குறைவாக இருக்கும். இதற்கிடையில் விமானம் புறப்படுவதற்கு 44 தினங்களுக்கு முன் டிக்கெட் சராசரி விலையில் இருக்கும். உதாரணமாக ஸ்பிரிங்பிரேக் டிக்கெட்டுகள் புறப்படுவதற்கு 38 தினங்களுக்கு முன் மலிவானதாக இருக்கும்.

ஜூலை (அல்லது) ஆகஸ்ட் மாதங்களில் விமானம் புறப்படும் 21 நாட்களுக்கு முன்பாக மலிவான விலையில் இருக்கும். சனி (அல்லது) ஞாயிற்றுக் கிழமைகளுக்குப் பதல் செவ்வாய், புதன் அல்லது வியாழக்கிழமைகளில் விமானங்களில் போகும்போது விலைகள் சராசரியாக 1.9 % குறைவாக இருக்கும். பணத்தைச் சேமிக்க சிறந்ததாக லே ஓவர் விமானம் கருதப்படுகிறது. கனெக்டிங் பிளைட்டுகளை விடவும் நான்-ஸ்டாப் பிளைட்டுகளில் பயணித்தால் 20 % பணத்தை மிச்சப்படுத்தலாம். அத்துடன் விமான கட்டணங்கள் எவ்வாறு மாறுகிறது என்பதைப் பார்க்க, காலண்டர் வியூ, டேட் க்ரிட் மற்றும் ப்ரைஸ் கிராப் ஆகியவற்றை பயன்படுத்தலாம் என கூகுள் பிளைட்ஸ் தெரிவித்துள்ளது. காலண்டர் வியூ மற்றும் டேட்க்ரிட் ஆகியவை நீங்கள் புறப்படும் நாள் மற்றும் திரும்பும் நாளில் எவ்வளவு பணத்தை சேமிக்கமுடியும் என்பதை காட்டுகிறது.

Categories

Tech |