Categories
டெக்னாலஜி

கம்மி விலையில் ஜியோ புக் 4ஜி லேப்டாப்…. 128GP மெமரி…. உடனே முந்துங்கள்…..!!!!

இந்தியாவில் ரிலையன்ஸின் JIO நிறுவனமானது சிம்கார்டுகள், மொபைல்கள் விற்பனையில் நம்பர்-1 இடத்தில் உள்ளது. அந்நிறுவனம் இப்போது லேப்டாப்பையும் விற்பனை செய்ய முடிவெடுத்து இருக்கிறது. அந்த வகையில் 4G கனெக்டிவிட்டி உடைய ஜியோபுக் லேப்டாப்-ஐ உருவாக்கி இருக்கிறது. இந்தியாவில் ஜியோ போன் பெற்ற வெற்றி ஜியோபுக் லேப்டாப்பிலும் பிரதிபலிக்கச் செய்யும் அடிப்படையில் இதன் விலையானது நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புது ஜியோபுக் மாடலில் 11.6 இன்ச் 1366×768 பிக்சல் ரெசல்யூஷன் உடைய HD டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. அத்துடன் குவால்காம் நிறுவனத்தின் 64 பிட், 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸரும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சிபியு உடன் 2GP ரேம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த லேப்டாப்பில் கூலிங்பேன் எதுவுமே பொருத்தப்படவில்லை. இதனுடைய அதிகபட்ச மெமரி 128GP ஆகும். இந்த லேப்டாப்பானது 32GP மெமரி உடனும் கிடைக்கும்.

மேலும் JIO ஒஎஸ் வழங்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. புது ஜியோபுக் மாடலை பல இந்திய மொழிகளில் இயக்கமுடியும். அத்துடன் பெரும்பாலான ஜியோ செயலிகள் மற்றும் மைக்ரோசாப்ட் 365 சேவைகள் இந்த லேப்டாப்பில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் புது ஜியோபுக் லேப்டாப் ரிலையன்ஸ் டிஜிட்டல் வலைதளத்தில் ரூபாய். 15 ஆயிரத்து 799 எனும் விலையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இந்த லேப்டாப் ஆனது இப்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கிறது.

Categories

Tech |