Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கம்மி விலையில் தங்கம் … நம்பாதீங்க … பெண்களே உஷார் …!!!

குறைத்த விலைக்கு தங்க நகை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதால் போலீசார்  கைது செய்தனர்  .

சென்னைக்கு அடுத்த மடிப்பாக்கத்தில் ,பெரியார் நகர் கக்கன் தெருவை சேர்ந்த 28 வயதுடையவர் மேகனா. இதே பகுதியில் 158 வது தேமுதிக வட்ட செயலாளரான 28 வயதுடைய சரத்குமார், குறைந்த விலைக்கு தங்கம் வாங்கித் தருவதாக மேகனாவிடம் கூறியுள்ளார். இதனை நம்பி மேகனா ரூபாய் 30,000 பணத்தை முதலில் கொடுத்துள்ளார்.இந்த பணத்திற்கு சரத்குமார் தங்க காசுகளை மேகனாவிற்கு வாங்கிக் கொடுத்துள்ளார்.

அதுமட்டுமில்லாது தனக்கு சென்னை விமான நிலையத்தில் பழக்கம் இருப்பதால் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்படும் தங்க நகைகளை குறைந்த விலைக்கு விற்பதாகவும் மேகனாவிடம் கூறியுள்ளார். இதனால் அவர் கூறியதை நம்பிய மேகனா தன் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடம் ரூபாய் 16 லட்சத்தை சரத்குமாரிடம் கொடுத்துள்ளார். சரத்குமார் நகையை திருப்பி தராமல் இருந்தார்.

பாதிக்கப்பட்டதை தெரிந்துகொண்டு ,மேகனா மோசடி தொடர்பாக 2019ஆம் ஆண்டு மடிப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப் பதிவு செய்த போலீஸார் கடந்த இரண்டு ஆண்டுகளாக சரத்குமார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். இதனால் மேகனா பரங்கிமலை காவல் நிலையத்தில் துணை கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் பண மோசடியில் ஈடுபட்ட தேமுதிக வட்டச் செயலாளராக சரத்குமாரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பின் சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |