குறைந்த விலையில் வீடு, நிலம் போன்ற சொத்துகளை வாங்குவதற்கு சூப்பரான வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பாங்க் ஆஃப் பரோடா ஆன்லைன் ஏலத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் எல்லா பகுதிகளிலும் நம்மால் சொத்துக்களை வாங்க முடியும். அதுவும் மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். ஆகஸ்ட் 18 ஆம் தேதி பேங்க் ஆப் பரோடா ஆன்லைன் மூலம் ஏலம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாங்க் ஆஃப் பரோடா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின் எந்த ஒரு பகுதியிலும் சொத்துக்களை வாங்கும் எண்ணம் இருப்பவர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு. ஆன்லைன் ஏலத்தை பயன்படுத்தி நீங்கள் சொத்துகளை வாங்கிக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 18ஆம் தேதி நடைபெற உள்ள ஏலத்தில் என்ன சொத்துக்களை வாங்கலாம். வீடுகள், அலுவலகங்கள், நிலம், தொழில் மற்றும் வணிக சொத்துக்கள் ஆகியவற்றை வாங்க முடியும்.