Categories
கிரிக்கெட்

“கம்முன்னு இருங்க எனக்கு எல்லாம் தெரியும்…!! ” கோலியை வச்சு செய்த ரோஹித்… வைரல் புகைப்படங்கள்..!!

இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 178/4 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதுதான் ரோகித் சர்மா முழுநேர கேப்டனாக இருக்கும் முதல் போட்டி. பந்து வீச்சின் போது கோலி சஹாலிடம் ஆலோசனை வழங்கியிருந்தார். இதேபோல் பீல்டிங் செட் செய்வது குறித்து ரோஹித் சர்மாவிற்கும் பல ஆலோசனைகள் கூறினார்.

இதனால் இந்திய அணி அடுத்தடுத்து ரன்களை குவித்து வெற்றி பெற முடிந்தது. இதனை அடுத்து கோலியும், ரோஹித் சர்மாவும் பேசிக் கொண்டிருந்த சில புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரவி வருகின்றன. ஹோல்டர், பாபியல் ஆலன் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து, ஸ்கோரை மெல்ல உயர்த்தி வந்தபோது கோலி ஐடியா கொடுக்க நினைத்து ரோஹித் சர்மாவிடம் ஏதோ சொல்ல வந்தார். அப்போது ரோகித் சர்மா கோலியை நீங்கள் உங்கள் இடத்திற்கு சென்று நில்லுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறி விட்டார். இதனால் சோகமாக கோலியும் தன்னுடைய இடத்தில் போய் நின்றார். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வெளியாகி வருகிறது.

Categories

Tech |