இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான நல்லகண்ணுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுதந்திரப் போராட்ட தியாகியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுல் ஒருவருமான நல்லகண்ணுவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நல்லகண்ணு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்று பாதித்த நல்லகண்ணுவுக்கு நுரையீரலில் சிறிது பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.