தெலுங்கானாவை சேர்ந்த கராத்தே மாஸ்டர் ஒருவர் தனது மாணவருடன் இணைந்து அதிரவைக்கும் கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் தற்காப்பு கலை ஆசிரியர் பிரபாகரன் ரெட்டி என்பவர் உலக அளவில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இந்த நிலையில் அவரும் அவரின் மாணவரான நெல்லூரை சேர்ந்த பா தாயில்லா ராகேஷ் என்பவரும் ஒன்றிணைந்து கடந்த மாதம் புதிய உலக சாதனை ஒன்றை நிகழ்த்தினார். அந்த சாதனையில் படுத்துக்கொள்ள அவரைச் சுற்றிலும் தேங்காய்களை வரிசையாக வைத்து மற்றொருவர் கண்களை கட்டிக்கொண்டு சுத்தியால் அந்த தேங்காய்களை அடித்து உடைக்க வேண்டும்.
அவர்கள் இருவரும் ஒரு நிமிடத்தில் மொத்தம் 49 தேங்காய்களை உடைத்து கின்னஸ் சாதனை படைத்திருக்கின்றனர். இந்த சாதனையை வெற்றிகரமாக நிகழ்த்துவதற்கு பிரபாகர் ரெட்டி ஆறு மாதங்களுக்கு மேலாக கடுமையான பயிற்சி எடுத்துள்ளார். அதுமட்டுமன்றி ஒரு நிமிடத்தில் 39 தேங்காய்களை உடைப்பதற்கு இலக்கு வைத்ததாகவும் ஆனால் 49 தேங்காய்களை உடைத்துதாகவும் அவர் கூறியுள்ளார்.