Categories
உலக செய்திகள்

“கரண்ட் & செல்போன் பிடிக்காது” 31 கிலோ எடையுள்ள அதிசய மனிதர்…. வியக்க வைக்கும் சம்பவம்…!!

31 கிலோ எடையுடைய நபர் ஒருவர் செல்போன் மற்றும் கரண்ட் இல்லாமல் வாழ்ந்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனில் வசித்து வருபவர் புருனோ பாரிக்(48). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இவருக்கு மின்சாரம் மற்றும் செல்போன் என்றால் பிடிக்காது. இவருக்கு செல்போனில் இருந்து வெளியேறும் ஒரு சில கதிர்வீச்சுகளால் அவரது உடலில் ஒருவிதமான அலர்ஜி ஏற்பட்டுள்ளது. மேலும் மருத்துவத்துறையில் இந்த நோய்க்கு எலக்ட்ரோ மேக்னடிக் ஹைப்பர்சென்சிட்டிவ் என்று பெயர். 31 கிலோ எடையுடைய இவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு மற்றவர்களைப் போல தான் சாதாரணமாக வாழ்ந்து வந்துள்ளார்.

ஆனால் கடந்த நான்கு வருடங்களாக திடீரென்று இந்த நோயினால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து இவர் செல்போன் மற்றும் கரண்ட் பயன்படுத்துவதை தவித்து வந்துள்ளார். செல்போன் போன்ற சாதனங்களிலிருந்து வரும் ஒரு வித கதிர் வீச்சுகள் யாரையும் பாதிக்காது என்று சொல்ல முடியாது, அதற்கு நான் ஒரு உதாரணம் என்று புருனோ பாரிக் கூறியுள்ளார்.  இச்சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முடிந்த அளவு செல்போனை விட்டு விலகி இருப்பது நமக்கு நல்ல பலனை அளிக்கும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |