Categories
அரசியல் மாநில செய்திகள்

கரண்ட் பாக்ஸை தண்டவாளத்தில் போட்டு… அமர்க்களம் செய்த இளைஞர்கள்… வைரலாகும் வீடியோ..!!

20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி சென்னையில் பாமகவினர் நடத்திய போராட்டத்தில் அக்காட்சியின் சேர்ந்தவர்கள் தண்டவாளத்தில் கரண்டு பாக்ஸை கொண்டுவந்து போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் வன்னிய சமூகத்திற்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி சென்னையில் இன்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதியில் இருந்து சென்னைக்கு பாமகவினர் நுழைய முயன்றனர். பெருங்களத்தூர் அருகே அவர்களுடைய வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். போராட்டத்தில் பங்கேற்க போலீசார் அனுமதி மறுத்ததால் ஜிஎஸ்டி சாலையில் பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கிடையே ரயில் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட தொடங்கியது. அதேபோல் ரயில் தண்டவாளத்தில் இளைஞர்கள் சிலர் மின்பாக்ஸ் ஒன்றை கொண்டுவந்து போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நடவடிக்கையை கண்டித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |