Categories
டெக்னாலஜி பல்சுவை

கரண்ட் பில் அதிகமாக வருதா…? அத இப்படியும் குறைக்கலாம்… இதோ 10 வழிகள்…. ட்ரை பண்ணுங்க…!!!

பொதுவாக கோடைகாலம் என்றாலே மின்சார கட்டணம் உச்சத்தை தொடும். தற்போது ஊரடங்கு என்பதால் மக்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. ஒவ்வொரு முறையும் கரண்ட் பில் எடுக்க வரும் போது கரண்ட் பில் உடல் சேர்க்கை பிபிஎம் ஏறும். மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு சில வழிகள் இருக்கின்றது. அதை பின்பற்றினால் மின்சார பயன்பாடு குறைந்து மின் கட்டணம் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. நம் வீட்டில் எப்படி எல்லாம் மின்சாரத்தை எளிமையாக சேமிப்பது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.

மின் கட்டணத்தை குறைக்க இதோ 10 வழிகள்:

குண்டு பல்பு விலை குறைவு என்று நினைத்து அதை பொருத்தினால் மின்சார செலவு கூடத்தான் செய்யும். எனவே விலை சற்று அதிகமாக இருந்தாலும் எல்இடி பல்புகளை வாங்குவது மிகவும் நல்லது.

டிவி பார்த்த உடனே அதை நிறுத்தி விடுவதுடன் அதன் பிளெக்கையும் நீக்கிவிடுவது நல்லது. வெறும் ரிமோட்டில் மட்டும் ஆஃப் செய்வதை தவிர்த்து விட வேண்டும்.இதேபோல செல்ஃபோன், மியூசிக் சிஸ்டம் போன்று அனைத்துப் எலக்ட்ரானிக் சாதனங்களையும்கூட உபயோகத்தில் இல்லாதபோது இணைப்பை எடுத்து விடுவது நல்லது.

வீட்டில் தேவையற்ற நேரங்களில் மின் விளக்குகளையும், மின் விசிறியை இயக்குவதை தவிருங்கள்.

ஃபிரிட்ஜின் குளிர்விக்கும் திறனை சற்று குறைவாக வைத்து இருந்தால் மின்சார கட்டணம் குறையும். கதவுகளில் உள்ள ரப்பரை சரிபார்ப்பது நல்லது. குளிர் காற்று வெளியில் வராமல் தடுக்க நீண்ட நேரம் பிரிட்ஜை திறந்து வைக்காமல் இருந்தாலும், மின்சாரம் வீணாவதைத் தடுக்க முடியும் .

கிரைண்டர் மற்றும் வாஷிங் மெஷினை பொறுத்தவரை மின்சார கட்டணம் அதிகமாகத்தான் செய்யும். குறிப்பாக வாசிங்மிசின் அப்லோடு ஓவர்லோடு ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட அளவிலாவது வைத்து இயக்குங்கள்.

வாட்டர் ஹீட்டரில் போதுமான மிகக் குறைந்த ஹீட்டை மட்டும் செட்செய்து வைத்தால் கூட அதிக அளவு மின்சாரத்தை சேமிக்கலாம்.

துணிகளை தினமும் அயன் செய்வதை தவிர்த்து வாரம் ஒரு முறை அயன் செய்தால் மின்சார செலவு குறையும்.

ஏசி பயன்படுத்தும் அறையில் பொதுவாக காற்று அதிக அளவில் வெளியில் செல்லும் அளவிற்கு இடைவெளி இருக்காது. இதனால் அடிக்கடி ஏசி சுத்தமாக சர்வீஸ் செய்து வைத்தால் மின்சாரத்தை சேமிக்கலாம்.

எந்தவிதமான உபயோக பொருட்களை வாங்கும் போதும் எனர்ஜி சேவிங்க்ஸ் என்ற முத்திரை பதித்த பொருட்களை வாங்கலாம். இதன் விலை சற்று அதிகம் இருந்தாலும் நிச்சயமாக மின்சாரத்தை மிச்சப்படுத்த உதவும்.

சோலார் மற்றும் மாற்று மின் சக்தி ஆதாரத்திற்கு மாறினாள் உங்கள் கரண்ட் பில் நிறைய மிச்சமாகும். இதற்கான செலவு சில ஆயிரங்களில் கிடைப்பதுடன் அரசின் மானியமும் கிடைக்கின்றது.

வீட்டில் இருக்கும் மின்சார சாதனங்கள் ஸ்மார்ட் ஆப்ஷன்கள் இருப்பதுபோல வாங்குவது நீண்டகாலத்திற்கு மின்சாரத்தை சேமிப்பதற்கு உதவும்.

Categories

Tech |