Categories
மாநில செய்திகள்

கரண்ட் பில் எவ்வளவு வந்துருக்குனு…. நீங்கள் ஈஸியா கணக்கிடலாம்…. இதோ எளிமையான வழி…!!!

தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம் ஒவ்வொரு வீடுகளிலும் 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தவகையில் முதல் 100 யூனிட் பயன்படுத்தியிருந்தால் இலவசம். அதற்கு மேல் பயன்படுத்ததியிருந்தால் அதற்கான கட்டணம் டெலஸ்கோபிக் டாரிஃப் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது. அதாவது, ஒருவர் 200 யூனிட்டுகள் பயன்படுத்தியிருந்தால் முதல் 100 யூனிட்டுகள் இலவசம். அதற்கு மேல் உள்ள யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை ரூ.1.5 என்ற வீதத்தில் 150 ரூபாயும்,  அத்துடன் நிலையான கட்டணம் ரூ.20-ம் சேர்த்து மொத்தமாக ரூ.170 வசூலிக்கப்பட்டு வருகின்றது.

அதுவே ஒருவர் 510 யூனிட்டுகள் பயன்படுத்தினால் முதல் 100 யுனிட்டுகள் இலவசம். ஆனால் அதற்கு மேல் உள்ள 101-200 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை ரூ.1.5க்கு பதிலாக ரூ.3.50 ஆக அதிகரித்து ரூ.350 என்று கணக்கில் கொள்ளப்படும். இதையடுத்து 201-500 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை ரூ.4.60 என்ற வீதத்தில் அதிகரித்து ரூ.1,380 வசூலிக்கப்படும்.  500-510 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை ரூ.6.60 என்ற வீதத்தில் அதிகரித்து ரூ.66, நிலையான கட்டணம் ரூ.20 என்று மொத்தமாக ரூ.1,846 வசூலிக்கப்படும்.

நாம் அதிகமாக 310 யூனிட்களே பயன்படுத்தியிருந்தாலும் முதலில் 200 யூனிட்டுகள் பயன்படுத்தினால் வரும் கட்டணத்தை விட ரூ.1,676 அதிகமாக வந்துவிடும். இந்நிலையில் நம்முடைய வீடுகளில் மின்சார கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகின்றது என்பது குறித்து இப்பத்து பார்க்கலாம். இதற்கு முதலில் TANGEDCO என்ற இணையதள பக்கத்திற்கு சென்று அதில் BILLING SERVICES என்ற ஆப்ஷனில் இருக்கும் BILL CALCULATER என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து அதில் வீட்டிற்கு என்றால் DOMESTIC என்று பதிவிட வேண்டும். பின்னர் அதில் உங்களுடைய மீட்டர் பெட்டியில் எவ்வளவு யூனிட் வந்திருக்கிறது என்பதை பார்த்து பதிவிட வேண்டும். எடுத்துக்காட்டாக 250 யூனிட் என்று  பதிவிட்டு calculate கொடுத்தல் உங்களுக்கு 100 யூனிட் இலவசம் கழித்து ரூ.260 வரும்.

Categories

Tech |