தம் ஆட்சியை கவிழ்ப்பதற்கு அமெரிக்க நாடு சதிசெய்ததாக குற்றம்சாட்டிய பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் திடீரென்று தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்.
இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய எந்த ஒரு வெளிநாடும் தமக்கு எதிரி அல்ல என்று கராச்சியில் நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் அவர் பேசியுள்ளார். முன்பாக சர்வதேச தளங்களில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்த 3 நாடுகளையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.
ஆனால் தற்போது இம்ரான் கான் பதவி இழந்த பின், இந்த 3 நாடுகளுடன் தனக்கு எவ்வித பகையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகளின் தாக்கத்திலிருந்து பாகிஸ்தானின் வெளியுறவுகொள்கை விடுபட வேண்டும் என்பதே தமது நோக்கம் என்றும் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்