Categories
தேசிய செய்திகள்

கருகலைக்க பெண்களுக்கு உரிமை உண்டு…. அதிரடி உத்தரவு…!!!

கருக்கலைப்பு என்பது கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பைக்கு வெளியே இருக்கும்போது உயிர்வாழக் கூடிய தன்மையை அடைவதற்கு முன்னர், அதனை கருப்பையிலிருந்து அகற்றி அதனை அழித்துவிடுதல் ஆகும். சில சமயங்களில் தானாகவே  கருப்பையின் உள்ளே இருக்கும்போது அழிந்துவிடுகின்றது. அவ்வாறு நிகழுமாயின், அது பொதுவாகக் கருச்சிதைவு அல்லது இயல்பு கருக்கலைப்பு அல்லது தானாக நிகழும் கருக்கலைப்பு   எனப்படும். தானாக அன்றி, ஒரு நோக்கோடு செய்யப்படும் கருக்கலைப்பு தூண்டற் கருக்கலைப்பு எனப்படுகிறது.

ஒரு சில சமயங்களில் கர்ப்பிணிப் பெண்ணின் அனுமதியில்லாமல் கட்டாயபடுத்தி கருக்கலைப்பு செய்யப்படுகிறது. இந்நிலையில் வயிற்றில் வளரும் கருவை வைத்துக் கொள்வதா? அல்லது கலைப்பதா? என்பதை முடிவு செய்யும் உரிமை பெண்களுக்கு உண்டு என்று கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. கருக்கலைப்பு சட்டப்படி கர்ப்பிணியின் வயிற்றில் வளரும் 22 வார சிசுவை கலைப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளது.

Categories

Tech |