கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 ஆயிரம் கோழி குஞ்சுகள் கருகி உயிரிழந்தன.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் ஊராட்சியில் கணேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான கறிக்கோழி பண்ணை அமைந்துள்ளது. இந்த கோழிப்பண்ணையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பண்ணையில் இருந்த 9,000 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழந்தன. மேலும் அங்கே இருந்த தீவனங்கள், கோழிப்பண்ணை உபகரணங்கள் போன்றவையும் தீயில் கருகி சாம்பல் ஆனது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.