குண்டர் சட்டத்தின் கீழ் 2 பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் அருகே கீழ்ப்பாடி கிராமத்தில் முத்துமாரி என்பவர் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். இந்த கடையில் கவிதா என்பவர் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்தமெடிக்களில் செல்வி என்பவர் கருக்கலைப்பு செய்வதற்கான மாத்திரை வாங்கியுள்ளார். இந்த மாத்திரையை செல்வி சாப்பிட்டதால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரிஷிவந்தியம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முத்துமாரி மற்றும் கவிதா ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்காக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் முடிவு செய்தார். இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார். இதற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அனுமதி வழங்கவே குண்டர் சட்டத்தின் கீழ் கவிதா மற்றும் முத்துமாரி கைது செய்யப்பட்டனர்.