கருக்கலைப்புக்காண கால வரம்பை 20 லிருந்து 25 வாரங்களாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குறிப்பிட்ட சில காரணங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கான காலவரம்பு தொடர்பான சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான புதிய விதிமுறைகளை அரசு நேற்று வெளியிட்டிருந்தது. அதன்படி இந்தியாவில் பொதுவாக பெண்கள் கருக்கலைப்பு செய்ய 12 வாரங்களுக்குள் ஒரு டாக்டரின் பரிந்துரையும், 12 முதல் 20 வாரங்களுக்கு கருக்கலைப்பு செய்வது எனில் இரண்டு டாக்டர்களின் பரிந்துரையும் அவசியம் என விதிகள் அமலில் உள்ள நிலையில், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் கருக்கலைப்பு செய்வதற்கான கால வரம்பை 20 வாரத்தில் இருந்து 24 வாரங்களாக உயர்த்தி புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.