பெண்களின் கருக்கலைப்புக்கான அரசியலமைப்பு உரிமையை அமெரிக்க உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது. கருக்கலைப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பினால் அமெரிக்கப் பெண்கள் தங்களுடைய கருக்கலைப்பு உரிமையை இழக்க உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர். மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 13 மாகாணங்கள் உடனடியாக கருக்கலைப்புக்கு தடை விதித்ததாக கூறப்படும் நிலையில் அங்கு கருகலைப்பு கிளினிக்குகள் மூடப்பட்டு வருகிறது.