உலகின் மிகவும் பழமையான ஜனநாயகமாக அமெரிக்கா கருதப்படுகிறது. அந்த ஜனநாயக நாட்டில் கடந்த 1973-ஆம் ஆண்டு கருக்கலைப்பு என்பது ஒரு பெண்ணின் தனிப்பட்ட உரிமை. அரசியலமைப்பு உரிமை என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி ஒரு பெண் 22 வாரங்கள் முதல் 2 வாரங்கள் வரை கர்ப்பத்தை அவர் விரும்பினால் கலைத்துக்கொள்ளலாம் என்று இருந்தது.
இந்நிலையில் அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமை சட்ட பூர்வமாக்கிய உத்தரவை நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதை ரத்து செய்ததால் இனி கருக்கலைப்பு தொடர்பான அதிகாரத்தை மாகாணங்கள் தாங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று அறிவித்து உள்ளது. இந்த தீர்ப்பை அதிபர் ஜோ பைடன் கடுமையாக எதிர்த்துள்ளார்.