Categories
தேசிய செய்திகள்

கருக்கலைப்பு: பெண்ணின் முடிவே இறுதியானது…. உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு….!!!!

தில்லியை சேர்ந்த 26 வயது பெண் தன் 33 வார கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதாவது, கருவிலுள்ள குழந்தைக்கு பெரு மூளையில் கோளாறு ஏற்பட்டு இருப்பதால் குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இவ்வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீபா சிங் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “மருத்துவர்கள் மறுத்தபோதிலும் பெண்ணின் 33 வார கருவைக் கலைக்க அனுமதி வழங்கி, இந்தியாவில் கருக்கலைப்பு பற்றி பெண் முடிவுசெய்ய சட்டத்தில் அதிகாரமுண்டு என்று நீதிபதி தெரிவித்தார்.

கருவை கலைப்பது தொடர்பான கர்ப்பிணி  பெண்ணின் உரிமை உலகம் முழுவதும் விவாதப்பொருளாக இருக்கிறது. ஆகவே கருக்கலைப்பு விவகாரத்தில் தாய் எடுக்கும் முடிவுதான் இறுதியானது. அத்துடன் ஒரு பெண்ணின் பிரசவ விருப்பத்தையும், பிறக்காத குழந்தையின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான வாய்ப்பையும் அங்கீகரிக்க வேண்டும். எனினும் கருக்கலைப்புக்கு மருத்துவக் குழுவின் கருத்தும் முக்கியமானது தான். குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு இந்த கருத்துகள் விரிவானதாக இருக்கவேண்டும். இது போன்ற விஷயத்தில் தரமான அறிக்கைகளுடன் வேகமும் முக்கியம்” என்று நீதிபதி தெரிவித்தார்.

Categories

Tech |