Categories
உலக செய்திகள்

“கருங்கடலில் தீவிர பயிற்சி”…. அடங்குமா ரஷ்யா…? அதிகரிக்கும் பதற்றம்…!!

ரஷ்யாவின் ராணுவ வீரர்கள் கருங்கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் போர்க்கப்பலில் தீவிரமாக பயிற்சி எடுப்பது உக்ரேன் மீது அந்நாடு எந்நேரத்திலும் போர் தொடுப்பதற்கு வாய்ப்புள்ளது என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது.

ரஷ்யாவுக்கும், உக்ரேனுக்குமிடையே கிரிமியா தொடர்பாக பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா உக்ரைன் எல்லையில் அதிபயங்கர போர் விமானங்களையும், 1 லட்சத்துக்கு மேலான இராணுவ வீரர்களையும் குவித்துள்ளது.

இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைன் மீது போர் கொடுக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதால் அமெரிக்கா அந்நாட்டிற்கு பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் ரஷ்ய ராணுவ வீரர்கள் கருங்கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் போர்க் கப்பலில் வைத்து இலக்குகளை துல்லியமாக சுடுவது போன்ற தீவிரமாக பயிற்சியில் ஈடுபடுவது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Categories

Tech |