Categories
உலகசெய்திகள்

கருங்கடல் பகுதி வழியாக தானிய ஏற்றுமதி…. ஒடேசா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட முதல் சரக்கு கப்பல்….!!!!!!!!

தனது அண்டை நாடான உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாத இறுதியில் போரை தொடங்கியுள்ளது. போரின் ஒரு பகுதியாக கருங்கடல் பகுதியில் போர் கப்பல்களை நிறுத்தி முற்றுகையிட்ட ரஷ்யா அந்த கடல் வழியாக உக்ரைன் கப்பல் போக்குவரத்து தடை ஏற்படுத்தியிருக்கிறது. உலகின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதியாளராக இருந்து வரும் சூழ்நிலையில் கருங்கடலில் உள்ள அந்த நாட்டின் உக்ரைன் துறைமுகங்கள் ரஷ்யாவில் முற்றுகையிடப்பட்டதால் தானிய ஏற்றுமதி தடைப்பட்டு இருக்கிறது. இதனால் உலகளாவிய உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஐநாவும் துருக்கி அரசும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

அதன்படி ஐநா மற்றும் துருக்கியின் ஏற்பாட்டில் உக்ரைன் ரஷ்யா இடையே பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் பலனாக கடந்த மாதம் 22ஆம் தேதி ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனி குட்ரெஸ் துருக்கி அதிபர் தாயீப் ஏர் டோகன் போன்றோரின் முன்னிலையில் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் ரஷ்யாவும் உக்ரைனும்  தனித்தனியாக கையெழுத்திட்டது. இந்த நிலையில் அந்த ஒப்பந்தத்தில் தானிய போக்குவரத்து பயன்படுத்தப்படும் சரக்கு கப்பல்கள் மீது துறைமுகத்திலோ கடல் வழியிலோ, தாக்குதல் நடத்த மாட்டோம் என ரஷ்யாவும் உக்ரைனும்  உறுதியளித்துள்ளது. ஆனால் ஒப்பந்தம் கையெழுத்தான சில மணி நேரங்களிலேயே கருங்கடலில் உள்ள உக்ரேனின் ஒடேசா துறைமுகத்தின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. எனினும் துறைமுகத்தில் உள்ள ராணுவ நிலைகளை மட்டுமே குறி வைப்பதாகவும் ஏற்றுமதி தடுக்கவில்லை எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. அதேபோல் உக்ரைனும் ஒப்பந்தத்தை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி இருந்தாலும் தானே ஏற்றுமதிக்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறியுள்ளது.

இந்த சூழலில் ஒப்பந்தத்தின்படி கருங்கடல் பகுதி வழியாக தானிய ஏற்றுமதி தொடங்கியதாகவும் உக்ரைன் தானியங்கள் ஏற்றப்பட்ட முதல் சரக்கு கப்பல் ஒடைசா துறைமுகத்திலிருந்து புறப்பட்டதாகவும் துருக்கி நேற்று அறிவித்துள்ளது. இது பற்றி துருக்கி ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரசோனி எனும் சரக்கு கப்பல் 26 ஆயிரம் டன் சோளத்தை ஏற்றுக்கொண்டு லெபனானுக்கு புறப்பட்டுள்ளது. இந்த கப்பல் இன்று துருக்கியின் இஸ்தாபுல் நகருக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இஸ்தாபுல் வந்ததும் ஒப்பந்தத்தின்படி ஐநா மற்றும் துருக்கி அதிகாரிகள் கப்பலை சோதனை செய்த பிறகு லெபனானுக்கு செல்ல அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |