கருடனை நாம் வானில் தரிசிப்பது என்பது மிகவும் சிறந்தது. கருடவாகனத்தில் பெருமாளை தரிசிப்பது பிறவிப் பயனை தரும் என்பார்கள். மேலும் கருடாழ்வாரை தரிசிப்பது வைகுண்ட பதவியை அளிக்கும் என்று கூறுவார்கள். கிழமைகளுக்கு ஏற்ப கருட வழிபாடு செய்வதில் மிகுந்த பலன்களை தரும். அதாவது ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபட்டால் தீராத நோய் நீங்கும். திங்கட் கிழமைகளில் வழிபட்டால் குடும்பம் செழிக்கும்.
செவ்வாய் கிழமைகளில் வழிபட்டால் உடல் வலிமை அதிகரிக்கும். புதன் கிழமைகளில் வழிபட்டால் எதிரிகள் மீதான பயம் நீங்குவதோடு, தொல்லைகள் நீங்கும். வியாழக்கிழமைகளில் கருட வழிபாடு செய்துவர ஆயுள் விருத்தி ஆகும். வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு செய்ய லட்சுமி கடாட்சம் உண்டாகும். பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமையில் வழிபாடு செய்தால் மோட்சம் கிடைக்கும்.