தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், சொத்துவரி உள்ளிட்ட விலைவாசி அதிகரிப்பை கண்டித்தும் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவினர் மாவட்டங்கள்தோறும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த அடிப்படையில் வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் எதிரில் தி.மு.க அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டையும், பல வகையிலான விலைவாசி உயர்வை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அவற்றில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்றார்.
அப்போது கே.சி.வீரமணி பேசியதாவது “இந்தியாவில் 520 வாக்குறுதிகளை கொடுத்தது தி.மு.க கட்சி மட்டும்தான். எனினும் அதில் ஒன்றைக்கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் அறிவிக்கப்படாத முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். தி.மு.க ஆட்சிக்கு வந்த 2 வருடங்களில் 2 லட்சம் கோடி கடன் பெற்று, அதை அடைக்க சொத்துவரி, வீட்டுவரி போன்ற விலைவாசியை உயர்த்தி உள்ளனர். இதனால் கருணாநிதி குடும்பத்தினரை விடவும் மன்னார்குடி மாபியா கும்பலே மேல்” என அவர் தெரிவித்துள்ளார்.