நடிகர் கருணாஸ் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் கருணாஸ். ஒருசிலப் படங்களில் நகைச்சுவை ச்நடிகராகவும் கதாநாயகராகவும் நடித்துள்ளார். தற்போது இரண்டொரு படங்களில் நடித்து வந்தாலும் பெரியளவில் அரசியலுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இவரது மனைவி பாடகி கிரேஸ் ஆவார். இவரின் மனைவி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக்கு வித் கோமாளிஷோவ்வில் போட்டியாளராக இருக்கிறார்.
இவரின் மகன் கென் கருணாஸ் ஆவார். அசுரன் படத்தில் தனுசுக்கு மகனாக நடித்து கென் கருணாஸ் நல்ல பெயரை பெற்றார். கருணாஸின் மகளை யாருக்கும் பெரிதாக தெரிந்திருக்காது. தற்போது கருணாஸ் தனது மனைவி, மகன், மகள் ஆகியோருடன் ஷாப்பிங் மாலில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.