Categories
சினிமா செய்திகள் டிரெய்லர் தமிழ் சினிமா

கருணாஸ் நடிப்பில் உருவாகியுள்ள “ஆதார்”… டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பு…!!!

கருணாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஆதார் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகரான கருணாஸ் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் ஆதார் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்கும் கருணாஸ் ஆதார் திரைப்படத்தில் முதன்மையான வேடத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை பிஎஸ் ராம்நாத் இயக்குகின்றார். ஹீரோயினாக ரித்விகா அடிக்கின்றார்.

இத்திரைப்படத்தில் அருண்பாண்டியன், ஆனந்த்பாபு, திலீப், பிரபாகர், மனிஷா யாதவ் ஆகியோர் நடிக்கிறார்கள். சசிகுமார் இந்த படத்தை தயாரிக்க ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கின்றார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தயாரிப்பு பணிகளானது நடந்து வருகின்றது. அண்மையில் பர்ஸ்ட் லுக் வெளியாகிய நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. கூடிய விரைவில் படம் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |