போலியான மதிப்பெண் சான்றிதழ் கொடுத்த வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நரியாம்பட்டியில் முனியப்பன் என்பவர் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2003-ஆம் ஆண்டு முனியப்பன் உயிரிழந்து விட்டதால் அவரது மகன் திருநாவுக்கரசு என்பவர் கருணை அடிப்படையில் கிராம உதவியாளர் பணி வழங்க வேண்டும் என மனு அளித்துள்ளார்.
அதனை ஏற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் அலுவலக அதிகாரிகள் சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்தனர். அப்போது திருநாவுக்கரசு சமர்ப்பித்த மதிப்பெண் சான்றிதழ் போலியானது என்பதை அறிந்த ஆம்பூர் தாசில்தார் மகாலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான திருநாவுக்கரசை தீவிரமாக தேடி வருகின்றனர்.