Categories
அரசியல்

கருணை உள்ளம் கொண்ட அன்னை தெரசாவின் வாழக்கை வரலாறு…. இதோ சில சுவாரஸ்ய தகவல்கள்….!!!

அன்னை தெரசா பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.

உலகம் முழுதும் உள்ள அனைத்து ஏழை மக்களுக்கும் உதவிய கருணை உள்ளம் படைத்த அன்னை தெரசா கடந்த 1910-ம் ஆண்டு யூகோஸ்லேவியாவில் உள்ள ஸ்கோப்ஜே நகரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ என்பதாகும். இவருக்கு 8 வயது இருக்கும்போது தந்தை இறந்ததால், தாயாரின் அரவணைப்பில் அன்னை தெரசா வளர்ந்தார். இவருடைய அன்னை மிகவும் கருணை உள்ளம் கொண்டவர். ஏனெனில் அன்னை தெரசாவின் வீட்டில் குடும்ப உறுப்பினர்களை தவிர நாள்தோறும் 10 பேர் அமர்ந்து சாப்பிடுவார்கள். ‘மற்றவர்களுக்கு ஒரு வாய் சாப்பாடு கூட கொடுக்காமல் சாப்பிடக்கூடாது’ என்பது அன்னை தெரசாவுக்கு தாய் சொல்லிக் கொடுத்த வேத மந்திரம்.

இந்நிலையில் அன்னை தெரசாவுக்கு 12 வயது இருக்கும் போது ஆன்மீகத்தின் மீது ஈடுபாடு வந்ததால், வீட்டை விட்டு வெளியேறி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். இவருக்கு 18 வயது ஆன போது கன்னியாஸ்திரியாக மாறினார். அதன் பிறகு தன்னுடைய பெயரை சகோதரி தெரசா என மாற்றிக் கொண்டார். கடந்த 1923-ம் ஆண்டு சோடாலிட்டி ஆப் சில்ட்ரன்ஸ் ஆப் மேரி என்ற சமூக சேவை அமைப்பில் சேர்ந்தார். கடந்த 1929-ஆம் ஆண்டு கல்கத்தா வந்த அன்னை தெரசா ஒரு பள்ளியில் சேர்ந்து ஆசிரியராக 17 வருடங்கள் பணி புரிந்தார். கடந்த 1946-ஆம் ஆண்டு ஆசிரியர் பணியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட அன்னை தெரசா வீடு வீடாக ஏழை, எளிய மக்களை சந்தித்தார். அதன் பிறகு ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்வதற்காக செவிலியர் படிப்பை படித்தார்.

இவருடன் சேர்ந்து 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஏழை, எளிய மக்களுக்கான சேவை பணிகள் தொடங்கப்பட்டது. கடந்த 1950-ம் ஆண்டு ஆர்டர் ஆப் தி மிஷனரி ஆப் சாரிட்டி என்ற அமைப்பை உருவாக்கிய அன்னை தெரசா தன்னுடைய தொண்டு நிறுவனத்திற்காக தெருத் தெருவாக சென்று நிதி திரட்டினார். கடந்த 1952-ஆம் ஆண்டு நிர்மல் ஹ்ரிதய் என்ற அமைப்பை தொடங்கிய அன்னை தெரசா வீதிகளில் கிடந்த தொழு நோயாளிகளை தன்னுடைய தொண்டு நிறுவனத்திற்கு அழைத்து வந்து அவர்களுக்கு சேவை செய்தார். அதோடு எய்ட்ஸ், காசநோய், தொழுநோய், ஆதரவற்ற குழந்தைகள், ஆதரவற்ற முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றவர்கள், அனாதை இல்லங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் போன்றவற்றையும் அன்னை தெரசா தொடங்கினார்.

இவர் உலகம் முழுவதும் யார் உதவி என்று கேட்டாலும் ஓடோடி சென்று அனைவருக்கும்  உதவியதால் கருணை உள்ளம் கொண்டவர், சிறந்த சமூக சேவகர் என்று அனைவராலும் பாராட்டப்பட்டார். கடந்த 1979-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை அன்னை தெரசா பெற்றார். இதைத் தொடர்ந்து அமெரிக்க நாடுகளின் ஆர்டர் ஆஃப் மெரிட், ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து, பிலிப்பைன்ஸின் ரமண் மகசேசே விருது, பாரத ரத்னா விருது மற்றும் ஜவஹர்லால் நேரு விருது உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விருதுகளை அன்னை தெரசா வாங்கியுள்ளார்.

இவருக்கு பல கௌரவ டாக்டர் பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளது. இப்படி துன்பத்தில் இருந்த மக்களுக்காக ஓடி ஓடி உதவி செய்த அன்னை தெரசா தன்னுடைய 87-வது வயதில் கடந்த 1997-ம் ஆண்டு உலகத்தை விட்டு மறைந்தார். மேலும் அன்னை தெரசா இறக்கும்போது உலக அளவில் 123 நாடுகளில் அன்னை தெரசாவின் 610 தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டது. இவ்ருடைய பிறந்த தினம் ஆகஸ்ட் 26-ம் தேதி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |