Categories
அரசியல் மாநில செய்திகள்

கருத்துகளில் முரண்பட்டாலும்….! தம்பி சவுக்கு சங்கருக்கு சிறை தண்டனையா….? சீமான் கொதிப்பு….!!!!!

தம்பி சவுக்கு சங்கருக்கான சிறைத்தண்டனை என்பது அதிகப்படியானது என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றியவரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் தனது இணையதளத்தில் புலனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறார்.அரசியல் கட்சிகள், தலைவர்கள், அரசு திட்டங்கள் குறித்து பல்வேறு விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். நீதிமன்ற தீர்ப்புகள் குறித்தும் சவுக்கு சங்கர் விமர்சனம் செய்தார். இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ‛யூ டியூபர்’ சவுக்கு சங்கருக்கு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்தது. இதனையடுத்து அவர் உடனடியாக மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சீமான், சவுக்கு சங்கர் மதுரை சிறையில் இருந்து நள்ளிரவே கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.  இதுபற்றி அவர், “நீதித்துறை குறித்து விமர்சித்ததற்காக தம்பி சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறுமாத சிறைத்தண்டனை அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரின் கருத்துகளில் முரண்பட்டாலும் அவரின் கருத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டும். நீதிமன்றங்கள் மக்களுக்கானதாக இருக்க வேண்டும் என்கிற அவரது வாதம் ஏற்கப்பட வேண்டிய ஒன்றுதான்” என்றார்.

Categories

Tech |