தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரச்சாரம் வருகிறார். அப்போது பேசிய அவர், “தேர்தல் நேரத்தில் அதிகமாக வரும் கருத்துக்கணிப்புகள் மக்களை குழப்புகிறது. தேர்தல் கணிப்புகளை தடை செய்ய வேண்டும். என் நாடு, என் உரிமை நான் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடுவேன். நான் அமெரிக்காவிலிருந்து வந்து திருவெற்றியூரில் போட்டியிடவில்லை” என்று கூறியுள்ளார்.