சென்னை அருகே அனல் மின் நிலையம் துவங்குவதற்கு முன் நடைபெறவிருக்கும் கருத்துக்கேட்பு கூட்டத்தில் மக்களில் ஒருவனாக பங்கேற்க உள்ளதாக சீமான் கூறியுள்ளார்.
சென்னை அருகே ஏற்கனவே அனல்மின்நிலையம் உள்ள நிலையில் புதிதாக அனல் மின் நிலையம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு புவியியல் வல்லுனர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே எண்ணூரில் புதிதாக அனல் மின் நிலையம் தொடங்கினால் அது சென்னைக்கு மிகுந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என அனைத்து தரப்பு மக்களும் கூறி வருகின்றனர். இந்நிலையில் ஜனவரி 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் கருத்து கேட்பு கூட்டத்தில் மக்களில் ஒருவனாக பங்கேற்க இருப்பதாக சீமான் கூறியுள்ளார். இந்நிலையில் கொரோணா பரவல் காரணமாக இந்த கூட்டத்தில் 100 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து தரப்பு மக்களின் கருத்துகளை கேட்டுபதற்கு ஏதுவாக ஐந்து அல்லது ஆறு கூட்டங்கள் கூட்டப்பட வேண்டும் என சீமான் கூறியுள்ளார்.
மேலும் இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தை முறியடிக்க வேண்டும் என்பதே பல அரசியல்வாதிகளின் நோக்கமாக இருப்பதாகவும் சீமான் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் இந்த சூழ்நிலையில் கருத்து கேட்புக் கூட்டத்தை இப்போது கூட்டினால் EIA2016 விதிகளின்படி கூட்டத்தை கூட்டியதற்கான நோக்கமே முறியடிக்கப்படும் எனவும் எனவே இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் எனவும் மேலும் அனல்மின்நிலையம் துவங்கும் அபாயகரமான திட்டத்தை ஒரேடியாக ஓரம் கட்டி வைக்க வேண்டும் எனவும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.