சென்னையில் ஒரு பெண் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேத்துப்பட்டில் அப்பா சாமி தெருவில் வசித்து வருபவர் பிரேம்குமார். இவருடைய மனைவி 40 வயதான ரேகா. இவர்கள் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில்கடந்த 24ஆம் தேதி ரேகா மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளித்து விட்டார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 27-ம் தேதி ரேகா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து சேத்துப்பட்டு காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.