மயங்கி விழுந்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மொட்டணம்பட்டி கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திண்டுக்கல்லில் அமைந்துள்ள ஒரு நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பாலமுருகன் அய்யலூர் பகுதியில் அமைந்துள்ள கருப்பசாமி கோவிலில் நடைபெற்ற கிடாவெட்டு விருந்திற்கு சாப்பிட சென்றுள்ளார். இதனையடுத்து பாலமுருகன் சாப்பிட்டு கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் பாலமுருகனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பாலமுருகனை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது